மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
கவிஞர் வாலி, இயற்பெயர் டி. எஸ். ரங்கராஜன்
காலம் ( 29 அக்டோபர், 1931 - 18 ஜுலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட
பாடலாசிரியருமான இவர், திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே
பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற
தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய
அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பிறந்து, வளர்ந்தது
திருவரங்கத்தில். மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம்
தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில்
காலமானா. சிறுகதை, கவிதை, உரைநடை என
இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். அம்மா, பொய்க்கால்
குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண
விஜயம் மற்றும் அவதார புருஷன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
1968, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல்
வாழ்க்கை இல்லை பாடலும், 1974 ல் தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன்
மயங்கும் என்ற பாடலும், 1967 ல் இரு மலர்கள் படத்தில் மாதவிப்பொன் மயிலாள்
தோகைவிரித்தாள் பாடலும், 1965 ல் எங்க
வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நான் ஆணையிட்டால் பாடலும், 1965 ல் கலங்கரை விளக்கம்
படத்தில் காற்று வாங்க போனேன் பாடலும், 1966 ல் சந்திரோதயம் படத்தில் சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ பாடலும், 1968 ல் எதிர்நீச்சல்
படத்தில் வெற்றி வேண்டுமா போட்டு பாரடா என்ற பாடலும், 1968 ஒளிவிளக்கு படத்தில் இறைவா உன் மாளிகையில் என்ற பாடலும், 1968 ல் உயர்ந்த
மனிதன் படத்தில் அந்த நாள் ஞாபகம் என்ற பாடலும், 1969 ல் இருகோடுகள் படத்தில் புன்னகை மன்னன்
பூவிழிகண்ணன் பாடலும், அதே ஆண்டு சுபதினம் படத்தில் ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி என்ற பாடலும், உதாரணங்களாகும்.
2010 ம் ஆண்டு
வெளியான காதல் ஒரு கவிதை திரைப்படத்தில், என்தூது செல், செல்.. பாடலும், எழுந்தாட
நாத்து பாடலும், காதல் பித்து என்ற பாடலும், கண்ணே காமன் போட்டான் பாடலும், மஞ்சள்
தங்கமே போன்ற பாடல்கள் அவர் என்றும்
இளமையான கவிஞர் என்ற தோற்றத்தை உலகிற்கு உணர்த்தியது.
1973 ல் இந்திய நாடு என் வீடு என்ற பாரத
விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை வாங்காமல் மறுத்து
விட்டார்.
பின்னர்,
1970 ல் எங்கள் தங்கம், 1979 ல் இவர்கள் வித்தியாசமானவர்கள் 1989 ம் வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள், 1990 ல் கேளடி
கண்மணி, 2008 ல் தசாவதாரம் என 5 முறை சிறந்த திரைப்படப்
பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதை பெற்றார்.
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில்
நின்றார்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...
No comments:
Post a Comment