Monday, July 22, 2013

பிஎஸ்என்எல் நெட்ஒர்க்கில் அலட்சியம்
தனியார் நிறுவனங்களின் சதியால் அவதிப்படும் வாடிக்கையாளர்கள்

திருவண்ணாமலை



திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பிஎஸ்என்எல்., செல்போன் சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்என்எல்., வாடிக்கையாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். பிஎஸ்என்எல்  பொதுத்துறை நிறுவன செல்போன் சேவையை அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினருக்கு எற்ற பல  திட்டங்கள்,  அதிக அளவிலான செல் டவர்கள், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எப்பொழுதும் தொடர்பு கொள்ளும் நிலை, நம்பிக்கையான சேவை போன்ற பல்வேறு காரணங்களால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்., செல்போன் சேவையை பயன்படுத்த விரும்பினர்.
      


     வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பிஎஸ்என்எல்., நிறுவனமும் அடிக்கடி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் பல நேரங்களில் டவர் பிரச்னை காரணமாக செல்போன் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. பல நேரங்களில் டயல் செய்தால் தொடர்பு கிடைப்பதில்லை. அனைத்து இணைப்புகளும் பிசியாக உள்ளது என்று ஒரே பதில். அப்படியே தொடர்பு கிடைத்தாலும் இடையில் திடீரென டவர் கட்ஆகி விடுவது போன்ற பல பிரச்சணைகள் வாடிக்கையாளர்களை வெறுப்படைய செய்கிறது. பிஎஸ்என்எல் டவர் தொல்லை தரும் அதே வேளையில், வொடாபோன், ஏர்செல், ஏர்டெல், ரிலையன்ஸ், டொகொமோ போன்ற பல தனியார் நிறுவனங்களின் சேவை மட்டும் தரமாக உள்ளது. bjhதொடர்ந்து தொந்தரவுக்கு ஆளாகும் பல வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவன செல்போன் சேவையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பிஎஸ்என்எல் லின் பல்வேறு பணிகளை அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் அளித்துள்ளதே இந்த பிரச்சனைகளுக்கு காரணம். போதாக்குறைக்கு தற்போது 30 சத பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியும் துவங்கியுள்ளது.  

      மத்திய அரசின் டெலிகாம் சர்வீஸ் துறையிலிருந்து தனியே உருவாக்கப்பட்ட பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தை முடக்க, மத்திய அரசும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பல்வேறு தனியார் டெலிகாம் நிறுவனங்களும் தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி நாட்டின் லட்சக்கணக்கான கிராமங்கள், வனப்பகுதி, மலைப்பகுதி, ஆறுகள் மற்றும் பாலைவனங்கள் உள்ளிட்ட இடங்களில் டெலிபோன் லைன்களை நிறுவி இன்றும் நாட்டின் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமாக பிஎஸ்என்எல் ஐ மாற்றியது அதன் ஊழியர்களின், அலுவலர்களின் உழைப்பே ஆகும். தற்போதும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது உபரி பணமான 35 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் வைத்துள்ளது. லட்சக்கணக்கான கி.மீ தூரத்திற்கு காப்பர் ஒயர் நெட்ஒர்க் வைத்துள்ள ஒரே டெலிகாம் நிறுவனம் பிஸ்என்எல் மட்டுமே. இத்தகைய பெருமைகளை சாதித்துள்ள நிறுவனத்தை சுயமாக முன்னேற்ற அரசு முயற்சிக்க வேண்டும். அதற்கு தேவையான  கட்டமைப்புகைளை பூர்த்தி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு தொலைத் தொடர்புத்துறையில் அடிப்படையான மற்றும் செல்போன் சேவைகளில் அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பதே நாட்டு மக்களின் வேதனையாக உள்ளது.       

No comments:

Post a Comment