Thursday, July 11, 2013

பூமியிலிருந்து பஞ்சலோக சிலைகள் கண்டுபிடிப்பு


திருவண்ணாமலை ஜுலை 11  


   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த எறையூர் கிராமத்தில் பூமியிலிருந்து பஞ்சலோக சாமி சிலைகளின் 12 உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.



 செங்கம் அடுத்த எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கள் (வ 65) இவருடைய விவசாய நிலத்தில் சுமார் 25 இண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட கிணற்றின் அருகில் கிணறு தோண்டிய மொரம்பு மண் கொட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த மண்ணை ஜெசிபி இயந்திரம் மூலம் ஆப்புறப்படுத்திய போது மண்மேட்டின் ஊள்ளிருந்து பஞ்சலோக சாமி சிலைகளின் ஊடைந்த 12 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சாமியின் கழுத்துக்கு கீழ் ஊள்ள பாகம் 2 ஊடைந்த கை 2 கால்பாதம் 3 கிரீடம் 2 தண்டாயுதம் 1 ஊள்ளிட்ட 12 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் செங்கம் தாசில்தார் ராஜலட்சுமிக்கு தகவல் கொடுத்தார். பின்னர் வருவாய் இய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் பஞ்சலோக சாமி சிலையின் உடைந்த பாகங்களை கைப்பற்றி கொண்டு வந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment