Wednesday, July 31, 2013

நில அளவை  கணக்கீடுகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்


Link

unit of length used in land surveys, named for the links of the chain formerly used by surveyors. There are 100 links in one (1) chain. One (1) link is equal to 0.66 feet, 0.04 rods, 0.01 chains, or 0.20 meters.
Link equivalents and conversions
A link is a unit of length used in land surveys.
One (1) link is equal to 0.66 feet.
One (1) link is equal to 0.01 chains.
One (1) link is equal to 0.001 furlongs.
One (1) link is equal to 0.04 rods, poles, or perches.
One (1) link is equal to 7.92 inches.
One (1) link is equal to 0.22 yards.
One (1) link is equal to 0.0001 miles.
One (1) link is equal to 20.1168 centimeters (cm).
One (1) link is equal to 0.2012 meters (m).
One (1) link is equal to 0.0002 kilometers (km).


நீட்டலளவை


•             10 கோண் = 1 நுண்ணணு
•             10 நுண்ணணு = 1 அணு
•             8 அணு = 1 கதிர்த்துகள்
•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு
•             8 துசும்பு = 1 மயிர்நுனி
•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்
•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு
•             8 சிறு கடுகு = 1 எள்
•             8 எள் = 1 நெல்
•             8 நெல் = 1 விரல்
•             12 விரல் = 1 சாண்
•             2 சாண் = 1 முழம்
•             4 முழம் = 1 பாகம்
•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
•             4 காதம் = 1 யோசனை
•             வழியளவை
•             8 தோரை(நெல்) = 1 விரல்
•             12 விரல் = 1 சாண்
•             2 சாண் = 1 முழம்
•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
•             2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
•             4 குரோசம் = 1 யோசனை
•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

                16 சாண் = 1 கோல்
                18 கோல் = 1 குழி
                100 குழி = 1 மா
                240 குழி = 1 பாடகம்


கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்1

 ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

Sunday, July 28, 2013


இந்திய மாணவர் சங்கத்தின் திருவண்ணாமலை 5 வது மாவட்ட 

மாநாடு ஜுலை 28 ஞாயிறு அன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி 

டவுன் ஹால் பள்ளி வளாகத்திலிருந்து மலையின் தோற்றம்




விவசாய சாகுபடியை உயர்த்த
புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்
திருவண்ணாமலை விவசாயிகள் எதிர்பார்ப்பு
       

நெல் சாகுபடி மற்றும் அரிசி பதனிடுதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தொழில்களாகும். பதினெட்டு சிறு தடுப்பணைகள், 1965 ஏரி பாசனங்கள் மற்றும் கிணற்று பாசனங்கள்  மூலம் சுமார் 1 லட்சத்து, 12 ஆயிரத்து 13 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யபடுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு நகருக்கு அருகிலுள்ள புளியரம்பாக்கத்தில் அரசு நெல் அரவை ஆலை உள்ளது.  மாவட்டத்திலேயே பெரிய அரிசி ஆலை ஆகும். மாவட்டத்தில் ஆரணி மற்றும் போளூர் வட்டங்களில் சுமார் 300  அரிசி ஆலைகள் உள்ளன. களம்பூர் பொன்னி என்னும் ஒரு வகை அரிசி இம்மாவட்டத்தின் களம்பூர் என்னுமிடத்தில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற அரிசி வகை ஆகும். செய்யாரில் உள்ளது போல் ஆரணி, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அரிசி ஆலைகள் அமைத்து, விவசாயிகளின் சாகுபடி நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நெல் சாகுபடி தவிர, கரும்பு சாகுபடியும், நிலக்கடலை சாகுபடியும் பரவலாக செய்யப்படுகிறது. நிலக்கடைலை சாகுபடியை மேம்படுத்த ஏற்கெனவே இயங்கி வந்து இடையில் நிறுத்தப்பட்டுள்ள, அரசு டான்காப் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளின் கரும்பு பணம் பாக்கி வைத்துள்ள அருணாச்சலா சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து பணத்தை பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், கரும்பின் கொள்முதல் அதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் எனறும் உழவர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த விவசாய சாகுபடியின் பாசனத்திற்காக,   திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு  சாத்தனூர் அணை முக்கிய நீர் ஆதாரமாக அமைந்திருக்கிறது. அணையின் பாசனத்தை நம்பி, விழுப்புரம் மாவட்டத்தில் 30,537 ஏக்கர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 19,463 ஏக்கர் உள்பட மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறுகிறது. 



     திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் 7,543 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் விவசாய சாகுபடியும் அணையின் தண்ணீரை நம்பியே உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 48 ஏரிகளும் சாத்தனூர் அணையின் மூலம் நிரம்பும் வாய்ப்புள்ளது.
அதேபோல், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கனவுத்திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தின் முதற்கட்ட பணி ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கியது. திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது நந்தன் கால்வாய் திட்டம். ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் துரிஞ்சாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து, அதிலிருந்து கால்வாய் மூலம் ஏரிகளுக்கு நீரை திருப்ப திட்டம் வடிவமைக்கப்பட்டது. அதற்கான திட்ட ஆய்வு அறிக்கை அளிக்கப்பட்டும், 10 ஆண்டாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், 14.50 கோடி மதிப்பில் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே சம்மந்தனூர் கிராமத்தில் உள்ள கீரனூர் அணைக்கட்டில் இருந்து தடுப்பணை அமைக்கவும், ஏற்கனவே ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள பழைய நீர்வரத்து கால்வாய்களை 5 மீட்டர் அகலத்தில் தூர்வாரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில்  நிறைவேற்றப்பட்டால் சுமார் 9 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் விவசாய சாகுபடி பயன்பெறும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செண்பகத்தோப்பு அணை, மிருகண்டா அணை ஆகியவற்றின் நீர் வெளியேற்றும் கால்வாய்களை சீரமைப்பதன் மூலம் விவசாய சாகுபடியை பெருக்க முடியும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.




ரியல் எஸ்டேட்களாக மாறிவரும் விவசாய நிலங்கள்

                   மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் பொதுவுடமை ஆட்சிகளின் போது அனைத்து குடும்பங்களுக்கும் விவசாய நிலங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. வீரத் தெலுங்கானா போராட்டத்தாலும், ஏழை விவசாயிகள் ஏராளமான நிலங்களைப் பெற்றனர். ஆயிரத்து தொள்ளாயிரங்கள் வரை நிம்மதியாக வாழ்ந்த விவசாயிகள் தற்போது 21 -ஆம் நூற்றாண்டில் மட்டும் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தை ஏற்படுத்தியது இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் தான். விலை மதிப்பு மிக்க நவீன ரக கார்கள் வாங்குபவர்களை கூவி, கூவி அழைத்து குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வங்கிகள், விவசாயத்திற்கு கடன் கேட்பவர்களை காத்துக் கிடக்கத் தானே சொல்கிறது. அப்படியே விவசாயத்திற்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்தாலும், அந்த கடன் பணக்காரர்களுக்கு தான் கிடைக்கிறது. உதாரணமாக முகேஷ் அம்பானிக்கு குளிர்பதன கிட்டங்கி அமைக்க வெறும் 4 சதவீத வட்டியில் விவசாய கடன் கொடுத்துள்ளது ஒரு வங்கி. வேறு வழியின்றி ராசி வட்டி, கந்து வட்டி என்று ஏழை விவசாயிகள் போகின்றனர். வட்டி மேல், வட்டி கட்ட முடியாமல் தானே அவமானத்தால் சாகிறார்கள்.       
      தமிழகத்தில் விவசாய நிலத்தின் பரப்பு, கடந்த 10 ஆண்டுகளில், 17  லட்சம் ஹெக்டர் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் விவசாய பரப்பு மற்றும் விளைபொருட்களின் உற்பத்தி குறைந்து வருகிறது. என்ன காரணம், பருவமழை முரன்பாடுகள், ஆறு மற்றும் ஏரி  பாசன திட்டங்களில் உள்ள கோளாறு, மழைநீரை சேமிக்கும் ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி புனரமைக்காத்து,  நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள், விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, வறட்சி மற்றும் வெள்ளங்களால் ஏற்படும் பாதிப்புகள், விவசாய சாகுபடி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது, இடைத்தரகர்கள், ஒரு கிலோ அரிசி விற்பது 45 ரூபாய். ஆனால் 100 கிலோ நெல் மூட்டை விவசாயிகளிடமிருந்து வாங்குவது 1250 ரூபாய். சாகுபடி பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பது இடைத்தரகர்கள். விவசாயம் குறித்த தொழில் நுட்பம், உபகரணங்கள், கல்வி ஆகியவை விவசாய குடும்பங்களுக்கு கிடைக்காதது, இவற்றுக்கெல்லாம் மேலாக விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாறும் கொடுமை. ஒரு படி நெல் கூலியாக கேட்டதற்கு 44 பேரை உயிருடன் எரித்த தஞ்சை வெண்மணி முதல் உத்தபுரம் வரை சாதிய ஒடுக்குமுறைகள் ஒரு பக்கம் தலைவிரித்து ஆடுகிறது.
பாரம்பரிய விதைகளை விட்டுவிட்டு மரபனு மாற்றப்பட்ட நெல், பருத்தி விதைகளை காசு கொடுத்து வாங்கியதன் விளைவு மான்சாண்டோ கம்பெனி விருப்பப்படியே விவசாயிகள் இனி விவசாயம் செய்யமுடியும். விலையும் மான்சாண்டோ விருப்பப்படிதான். 90 களுக்கு முன் விவசாயம் செய்த குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 டன் உணவு தானியத்தை உற்பத்தி செய்தார்கள். வீட்டு வாசலில் யார் வந்து உதவி என்று கேட்டாலும் தயங்காமல் உடனடியாக ஒரு படி நெல்லோ, கம்போ,கேழ்வரகோ எடுத்து கொடுத்தனர். இன்று இலவச அரிசி கிடைக்குமா என்று  ரேஷன் கடையில் கியூவில் நிற்கும் அவலம் தான் இந்த தேசத்தை ஆண்ட ஆட்சியாளர்களால் தர முடிந்துள்ளது.

குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள் தினசரி காலி குடங்களுடன் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தாத நாளே இல்லை. ஒரு லிட்டர் பால் 24 ரூபாய், 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய். குடிக்கும் தண்ணரை கூட மக்களுக்கு போதிய அளவு வழங்க முடியாதது தான் ஆட்சியாளர்களின் சாதணை. கரும்பு, நெல், தேங்காய், தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வன ஓரங்களில் உள்ள விவசாயிகளின் சாகுபடி பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த தகுந்த வேலி அமைக்க வேண்டும். மலைவாழ் மக்கள் வனங்களில் விளையும் விளை பொருட்களை எடுத்து பயன்படுத்தும் அதிகாரத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை குறித்து கடலூரில் நடைபெறும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33 வது மாநாடு ஆய்வு செய்கிறது. மாநாடு சிறக்கட்டும் விவசாயிகளின் வாழ்க்கை விடியட்டும்.       

Thursday, July 25, 2013


பச்சை வண்ண சேலை..... கட்டிகொண்ட.....பூமி.....
வானமெங்கும் கவிதை, எழுதி பார்க்கும் பறவை
வண்ண வண்ண கோலங்கள் போட்டிடும் மேகங்களே
சின்ன குயில் ராகங்கள் கேட்டிடும் காடுகளே.
பூக்கள் விடும் தூது என்ற திரைப்படத்தில் டி.ராஜேந்தர் எழுதிய பாடல் இது.

பாடல் மறக்கவில்லை. ஆனால் பூமியில் உள்ள காட்சிகள் மறைந்து வருகிறது.


எப்படி இருந்த நான்





இப்படி ஆயிட்டேன்.





Monday, July 22, 2013




காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்
அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்
நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்
அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்

என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா


     கவிஞர் வாலி, இயற்பெயர் டி. எஸ். ரங்கராஜன்
காலம் ( 29 அக்டோபர், 1931 - 18 ஜுலை  2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியருமான இவர், திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.  இவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
        
  பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானா. சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


1968, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை பாடலும், 1974 ல் தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலும், 1967 ல் இரு மலர்கள் படத்தில் மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள் பாடலும், 1965 ல் எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நான் ஆணையிட்டால் பாடலும், 1965 ல்  கலங்கரை விளக்கம் படத்தில் காற்று வாங்க போனேன் பாடலும், 1966 ல் சந்திரோதயம் படத்தில்    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ பாடலும், 1968 ல் எதிர்நீச்சல் படத்தில் வெற்றி வேண்டுமா போட்டு பாரடா என்ற பாடலும்,   1968 ஒளிவிளக்கு படத்தில்  இறைவா உன் மாளிகையில் என்ற பாடலும், 1968 ல் உயர்ந்த மனிதன் படத்தில் அந்த நாள் ஞாபகம் என்ற பாடலும், 1969 ல்  இருகோடுகள் படத்தில் புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் பாடலும், அதே ஆண்டு சுபதினம் படத்தில் ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி என்ற பாடலும், உதாரணங்களாகும்.
        
        2010 ம் ஆண்டு வெளியான காதல் ஒரு கவிதை திரைப்படத்தில், என்தூது செல், செல்.. பாடலும், எழுந்தாட நாத்து பாடலும், காதல் பித்து என்ற பாடலும், கண்ணே காமன் போட்டான் பாடலும், மஞ்சள் தங்கமே போன்ற பாடல்கள்  அவர் என்றும் இளமையான கவிஞர் என்ற தோற்றத்தை உலகிற்கு உணர்த்தியது.  
   
1973 ல் இந்திய நாடு என் வீடு என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை வாங்காமல் மறுத்து விட்டார்.
பின்னர்,
 1970 ல்  எங்கள் தங்கம், 1979 ல்  இவர்கள் வித்தியாசமானவர்கள் 1989 ம்  வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள், 1990 ல் கேளடி கண்மணி, 2008 ல் தசாவதாரம் என 5 முறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதை பெற்றார்.

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...





பிஎஸ்என்எல் நெட்ஒர்க்கில் அலட்சியம்
தனியார் நிறுவனங்களின் சதியால் அவதிப்படும் வாடிக்கையாளர்கள்

திருவண்ணாமலை



திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பிஎஸ்என்எல்., செல்போன் சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்என்எல்., வாடிக்கையாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். பிஎஸ்என்எல்  பொதுத்துறை நிறுவன செல்போன் சேவையை அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினருக்கு எற்ற பல  திட்டங்கள்,  அதிக அளவிலான செல் டவர்கள், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எப்பொழுதும் தொடர்பு கொள்ளும் நிலை, நம்பிக்கையான சேவை போன்ற பல்வேறு காரணங்களால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்., செல்போன் சேவையை பயன்படுத்த விரும்பினர்.
      


     வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பிஎஸ்என்எல்., நிறுவனமும் அடிக்கடி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் பல நேரங்களில் டவர் பிரச்னை காரணமாக செல்போன் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. பல நேரங்களில் டயல் செய்தால் தொடர்பு கிடைப்பதில்லை. அனைத்து இணைப்புகளும் பிசியாக உள்ளது என்று ஒரே பதில். அப்படியே தொடர்பு கிடைத்தாலும் இடையில் திடீரென டவர் கட்ஆகி விடுவது போன்ற பல பிரச்சணைகள் வாடிக்கையாளர்களை வெறுப்படைய செய்கிறது. பிஎஸ்என்எல் டவர் தொல்லை தரும் அதே வேளையில், வொடாபோன், ஏர்செல், ஏர்டெல், ரிலையன்ஸ், டொகொமோ போன்ற பல தனியார் நிறுவனங்களின் சேவை மட்டும் தரமாக உள்ளது. bjhதொடர்ந்து தொந்தரவுக்கு ஆளாகும் பல வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவன செல்போன் சேவையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பிஎஸ்என்எல் லின் பல்வேறு பணிகளை அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் அளித்துள்ளதே இந்த பிரச்சனைகளுக்கு காரணம். போதாக்குறைக்கு தற்போது 30 சத பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியும் துவங்கியுள்ளது.  

      மத்திய அரசின் டெலிகாம் சர்வீஸ் துறையிலிருந்து தனியே உருவாக்கப்பட்ட பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தை முடக்க, மத்திய அரசும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பல்வேறு தனியார் டெலிகாம் நிறுவனங்களும் தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி நாட்டின் லட்சக்கணக்கான கிராமங்கள், வனப்பகுதி, மலைப்பகுதி, ஆறுகள் மற்றும் பாலைவனங்கள் உள்ளிட்ட இடங்களில் டெலிபோன் லைன்களை நிறுவி இன்றும் நாட்டின் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமாக பிஎஸ்என்எல் ஐ மாற்றியது அதன் ஊழியர்களின், அலுவலர்களின் உழைப்பே ஆகும். தற்போதும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது உபரி பணமான 35 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் வைத்துள்ளது. லட்சக்கணக்கான கி.மீ தூரத்திற்கு காப்பர் ஒயர் நெட்ஒர்க் வைத்துள்ள ஒரே டெலிகாம் நிறுவனம் பிஸ்என்எல் மட்டுமே. இத்தகைய பெருமைகளை சாதித்துள்ள நிறுவனத்தை சுயமாக முன்னேற்ற அரசு முயற்சிக்க வேண்டும். அதற்கு தேவையான  கட்டமைப்புகைளை பூர்த்தி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு தொலைத் தொடர்புத்துறையில் அடிப்படையான மற்றும் செல்போன் சேவைகளில் அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பதே நாட்டு மக்களின் வேதனையாக உள்ளது.       
மாவட்ட அரசியல் வாதிகளின் சுய விருப்பத்திற்காக செயல்படாதவர். 


  
 மாவட்டத்தில் கல்வி மேம்பாடு மற்றும் நேர்மை, மலைவாழ் கிராம மக்களின் முன்னேற்றம், வனப்பகுதி பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு அகியவற்றில் தீவிர செயலாக்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி விரைந்து செயல்வடிவம் பெற முயற்சி எடுத்தவர், 
               பல்வேறு அரசுத்துறை செயல்பாடுகளை செழுமைப்படுத்தியவர்  மாவட்ட ஆட்சியர் விஜய்பிங்ளே. 

             திருவண்ணாமலை ஆட்சியர் பதவியிலிருந்து ஏன் திடீரென மாற்றப்பட்டார்?. காரணம் என்ன?. யாருடைய விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்டார்?. என்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசு பதில் சொல்லுமா?      

Thursday, July 11, 2013

பூமியிலிருந்து பஞ்சலோக சிலைகள் கண்டுபிடிப்பு


திருவண்ணாமலை ஜுலை 11  


   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த எறையூர் கிராமத்தில் பூமியிலிருந்து பஞ்சலோக சாமி சிலைகளின் 12 உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.



 செங்கம் அடுத்த எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கள் (வ 65) இவருடைய விவசாய நிலத்தில் சுமார் 25 இண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட கிணற்றின் அருகில் கிணறு தோண்டிய மொரம்பு மண் கொட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த மண்ணை ஜெசிபி இயந்திரம் மூலம் ஆப்புறப்படுத்திய போது மண்மேட்டின் ஊள்ளிருந்து பஞ்சலோக சாமி சிலைகளின் ஊடைந்த 12 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சாமியின் கழுத்துக்கு கீழ் ஊள்ள பாகம் 2 ஊடைந்த கை 2 கால்பாதம் 3 கிரீடம் 2 தண்டாயுதம் 1 ஊள்ளிட்ட 12 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் செங்கம் தாசில்தார் ராஜலட்சுமிக்கு தகவல் கொடுத்தார். பின்னர் வருவாய் இய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் பஞ்சலோக சாமி சிலையின் உடைந்த பாகங்களை கைப்பற்றி கொண்டு வந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Wednesday, July 10, 2013

உபயோகமான சில Toll Free நம்பர்கள்

Airlines

Indian Airlines - (1800 180 1407)
Jet Airways - (1800 22 5522)Spice Jet - (1800 180 3333)
Air India -- (1800 22 7722)
Kingfisher - (1800 180 0101)

Banks

ABN AMRO - (1800 11 2224)
Canara Bank - (1800 44 6000)
Citibank - (1800 44 2265)
Corporation Bank - (1800 443 555)
Development Credit Bank - (1800 22 5769)
HDFC Bank - (1800 227 227)
ICICI Bank - (1800 333 499)
ICICI Bank NRI - (1800 22 4848)
IDBI Bank - (1800 11 6999)
Indian Bank - (1800 425 1400)
ING Vysya - (1800 44 9900)
Kotak Mahindra Bank - (1800 22 6022)
Lord Krishna Bank - (1800 11 2300)
Punjab National Bank - (1800 122 222)
State Bank of India - (1800 44 1955)
Syndicate Bank - (1800 44 6655)

Automobiles
Mahindra Scorpio - (1800 22 6006)
Maruti - (1800 111 515)
Tata Motors - (1800 22 5552)
Windshield Experts - (1800 11 3636)

Computers/IT

Adrenalin - (1800 444 445)
AMD - (1800 425 6664)
Apple Computers - (1800 444 683)
Canon - (1800 333 366)
Cisco Systems - (1800 221 777)
Compaq - HP - (1800 444 999)
Data One Broadband - (1800 424 1800)
Dell - (1800 444 026)
Epson - (1800 44 0011)
eSys - (3970 0011)
Genesis Tally Academy - (1800 444 888)
HCL - (1800 180 8080)
IBM - (1800 443 333)
Lexmark - (1800 22 4477)
Marshal's Point - (1800 33 4488)
Microsoft - (1800 111 100)
Microsoft Virus Update - (1901 333 334)
Seagate - (1 800 425 4535)
Symantec - (1800 44 5533)
TVS Electronics - (1800 444 566)
WeP Peripherals - (1800 44 6446)
Wipro - (1800 333 312)
Xerox - (1800 180 1225)
Zenith - (1800 222 004)

Railway

Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9

Couriers/Packers & Movers

ABT Courier - (1800 44 8585)
AFL Wizz - (1800 22 9696)
Agarwal Packers & Movers - (1800 11 4321)
Associated Packers P Ltd - (1800 21 4560)
DHL - (1800 111 345)FedEx - (1800 22 6161)
Goel Packers & Movers - (1800 11 3456)
UPS - (1800 22 7171)

Home Appliances

Aiwa/Sony - (1800 11 1188)
Anchor Switches - (1800 22 7979)
Blue Star - (1800 22 2200)
Bose Audio - (1800 11 2673)
Bru Coffee Vending Machines - (1800 44 7171)
Daikin Air Conditioners - (1800 444 222)
DishTV - (1800 12 3474)
Faber Chimneys - (1800 21 4595)
Godrej - (1800 22 5511)
Grundfos Pumps - (1800 33 4555)
LG - (1901 180 9999)
Philips - (1800 22 4422)
Samsung - (1800 113 444)
Sanyo - (1800 11 0101)
Voltas - (1800 33 4546)
WorldSpace Satellite Radio - (1800 44 5432)

Travel

Club Mahindra Holidays - (1800 33 4539)
Cox & Kings - (1800 22 1235)
God TV Tours - (1800 442 777)
Kerala Tourism - (1800 444 747)
Kumarakom Lake Resort - (1800 44 5030
Raj Travels & Tours - (1800 22 9900)
Sita Tours - (1800 111 911)
SOTC Tours - (1800 22 3344)

Healthcare

Best on Health - (1800 11 8899)
Dr Batras - (1800 11 6767)
GlaxoSmithKline - (1800 22 8797)
Johnson & Johnson - (1800 22 8111)
Kaya Skin Clinic - (1800 22 5292)
LifeCell - (1800 44 5323)
Manmar Technologies - (1800 33 4420)
Pfizer - (1800 442 442)
Roche Accu-Chek - (1800 11 4546)
Rudraksha - (1800 21 4708)
Varilux Lenses - (1800 44 8383)
VLCC - (1800 33 1262)

Hotel Reservations

GRT Grand - (1800 44 5500)
InterContinental Hotels Group - (1800 111 000
Marriott - (1800 22 0044)
Sarovar Park Plaza - (1800 111 222)
Taj Holidays - (1800 111 825)

Teleshopping

Asian Sky Shop - (1800 22 1800)
Jaipan Teleshoppe - (1800 11 5225)
Tele Brands - (1800 11 8000)
VMI Teleshopping - (1800 447 777)
WWS Teleshopping - (1800 220 777)

Others

Domino's Pizza - (1800 111 123)

Cell Phones

BenQ - (1800 22 08 08)
Bird CellPhones - (1800 11 7700)
Motorola MotoAssist - (1800 11 1211)
Nokia - (3030 3838)

Sony Ericsson - (3901 1111).

Tuesday, July 9, 2013

அரசுத் துறைகளின் துறைகள் இணைய சேவைகள்

                                                                                                                                                         
பட்டா / சிட்டா அடங்கல் சான்றிதழ்கள் பெற

http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

அ-பதிவேடு விவரங்களை பார்வையிட

http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

வில்லங்க சான்றிதழ்

http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்

http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்

http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்

http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

* E-டிக்கெட் முன் பதிவு:

ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு

http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

* E-Payments (Online):

BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி

http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

* கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்

https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

http://www.tn.gov.in/dge

UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

http://www.tnpsc.gov.in/

http://www.upsc.gov.in/

http://upscportal.com/civilservices/

http://www.iba.org.in/

http://www.rrcb.gov.in/

http://trb.tn.nic.in/

இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய

http://www.ssbrectt.gov.in/

http://bsf.nic.in/en/career.html

http://indianarmy.nic.in/

இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய

http://nausena-bharti.nic.in/

* பொது சேவைகள் (Online)

தகவல் அறியும் உரிமை சட்டம்

http://rti.gov.in/

http://www.rtiindia.org/forum/content/

http://rti.india.gov.in/

http://www.rti.org/

SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்

http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.

http://www.indiapost.gov.in/tracking.aspx

* அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

பாஸ்போர்ட் விண்ணப்பம்

http://www.passport.gov.in/

பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய

http://www.tn.gov.in/services/employment.html

* அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

குடும்ப அட்டை

http://www.tn.gov.in/appforms/ration.pdf

மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்

http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்

http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு

http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு

http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf

http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf