சேலம் மாவட்டத்தில் வீணு
என்ற மாணவியும் அவரின் தந்தை முத்துகிருஷ்ணனும் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று
அளித்துள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணன் பேசியதாவது, என்
மகள் வீணு பிளஸ் 2 வில் 904 மதிப்பெண் எடுத்தும் அரசு கல்லூரிகள்ல இடம் கிடைக்கவில்லை.
காரணம் சாதி சான்றிதழ். நாங்க இந்து மன்னன்
சாதியை சேர்ந்தவர்கள். இது எஸ்.டி பிரிவில் சேர்கிறது. அரசானை 1773
23.06.1984 தேதியிட்ட எஸ்.சி எஸ்.டி
ஆக்ட் 1976 கீழ் வழங்கப்பட்டது. எனக்கு
சாதி சான்றிதழ் உள்ளது. எனக்கு 3
குழந்தைகள் ஆனால் மூவருக்கும் சாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். சாதி
சான்றிதழ் இல்லாமல் அரசு கல்லூரியில் சேர்த்து கொள்ள மாறுகிறார்கள். சாதாரண கூலி
வேலை செய்யும் நான் என் மூன்று பிள்ளைகளையும் தனியாரில் பணம் கட்டி சேர்க்க
இயலாது. எனவே என் பிள்ளைக்கு சாதி சான்றிதழ் வழங்கி கல்விக்கு உதவுங்கள்' என்றார். நான் மேல படிக்கனும்னா எப்படியாவது
எனக்கு சாதி சான்றிதழ் கிடைக்கணும் அப்போதான் அரசின் சலுகைகள் கிடைத்து கல்வியில்
நான் சாதிக்க முடியும்' என்றார்
மாணவி வீணு
No comments:
Post a Comment