25 கோடி
ஆண்டுகள் பழமையான கல்மரம்
இருபத்தைந்து கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் ஒன்று
ஆந்திராவில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் உள்ள
வனப்பகுதி இதுரு
நகரம். அப்பகுதியில் மிகப் பழமையான கல்மர படிவம்
ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்
மண்ணியல் தாவரவியல் மற்றும் வனத்துறை
நிபுணர்கள். பொதுவாக பலகோடி ஆண்டுகளுக்கு
முன்பு பூமியில் புதையுண்ட
மரங்கள், மண் மற்றும் பாறையுடன் இறுகி ரசாயன மாற்றங்களால் கல்மரம்
படிவங்களாக மாறுகின்றன.
முதல் கட்ட கணிப்பில், இந்த கல்மரம் சுமார் 12 கோடி முதல் 25 கோடி
ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என
அனுமானிக்கப்பட்டுள்ளது.
இதுரு நகரம் வனப்பகுதிக்குட்பட்ட சிட்யால், சிந்தகுடா, வடக்கு சர்வை, தெற்கு
சர்வை
காடுகளில் இது போன்ற கல்மரங்கள் அதிகளவில் காணப்படுவதாக
நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர். ஏற்கனவே,
இப்பகுதி
மண்ணியல் மரபு பகுதியாக
அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment