Thursday, August 29, 2013

வாழ்ந்த காட்டை விட்டு முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படும் யானைகளின் பரிதாபம்

யானைகள் காட்டில் வாழவது குற்றமா?


காலங்காலமாக காடுகளில் சுதந்திரமாக வசிப்பது யானைகளின் உரிமை. நமது காடுகளில் யானைகள் இருப்பது நமக்கு பெருமை. பரந்த வனப்பரப்புகளில் கூட்டங்கூட்டமாக யானைகள் வசிக்கும். கூட்டங்கள் ஒன்று கூடுவதால் வலிமையான யானைகள் உருவாகும். வன உயிரினங்களின்  எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் வனப்பிரதேசத்தை அதிகப்படுத்தாமல், காட்டு யானைகளை மயக்கி, பழகு யானைகளாக மாற்றும் திட்டம் ஏற்புடையதில்லை என்றே இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 




காடுகளில் வசிக்கும் யானைகள் ஏன் ஊருக்குள் வருகிறது?. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதாலும், காடுகளின் ஊடே சாலைகள் அமைக்கப்படுவதாலும், வாகன போக்குவரத்து ஏற்படுவதாலும், ரிசார்ட் எனப்படும் வீடுகள் அமைக்கப்படுவதாலும் யானைகள் தொந்தரவுக்கு ஆளாகின்றன. யானைகளின் பழக்கமான வழித்தடம் மாற்றப்படுகிறது. உணவுக்கும், தண்ணீருக்கும் காட்டுக்குள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே தான் உணவையும், தண்ணீரையும் தேடி யானைகள் ஊரை ஒட்டியுள்ள வயல் பகுதிகளுக்கு வருகின்றன. அதில் சாகுபடி பயிர்களும், குடிசை வீடுகளும் சேதமடைகிறுது. மனிதர்களின் சாகுபடிபயிர்களையும், குடிசைகளையும் சேதப்படுத்த வேண்டும் என்பது யானையின் நோக்கமல்ல. காட்டிற்குள் யானைக்கு தேவையானது கிடைத்துவிட்டால் அது ஊருக்குள் வரப்போவதில்லை. 



வலிமையுடன் வனங்களில் திரிந்த யானைகளை, அகதிகளை போல முகாம்களுக்கு கொண்டு சென்று பழகு யானைகளாக மாற்றுவது வேதனையளிக்கிறது. பழகு யானைகளாக மாற்றி அதன் பலத்தை குறைத்து, கடை, கடையாக தும்பிக்கையை நீட்டி யானைகளை நிற்க வைப்பதுதான், நமது காலத்தின் சாதனையாக எதிர்கால வரலாறு சொல்லப்போகிறது என்பதுதான் உண்மை.       


No comments:

Post a Comment