மனதை கவர்ந்த மலர்கள் (2)
இன்றைய பகுதியில் இடம்பெறும், இசை மலரின் பெயர் ஜென்சி.
1961 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்த ஜென்சி, யேசுதாஸ் அறிமுகத்தால், இளையராஜாவின் இசையில் 1978 முதல் 1982 ஆம் ஆண்டுவரை 20 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திருத்தமான தமிழ் வார்த்தைகளுடன் பெண் பாடகர்கள் பாடிவந்த காலத்தில், வார்த்தைகளை மென்மையாக்கி, மழலையும், இளமையும் கலந்த குரலில் பாடிய ஜென்சியின் குரல், ஏராளமான தமிழ் ரசிகர்ளை மயக்கியது.
புதிய வார்ப்புகள் படத்தில், “தம்தன தம்தன தாளம் வரும், புதுராகம் வரும்” மற்றும், "இதயம் போகுதே, எனையே பிரிந்தேன்" பாடலும்,
ஜானி படத்தில், “என் வானிலே, ஒரே வெண்ணிலா” பாடலும்,
உல்லாசப் பறவைகள் படத்தில் “தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்” பாடலும்,
முள்ளும் மலரும் படத்தில், “அடிப்பெண்ணே.. பொன்னுஞ்சல் ஆடும் இளமை பாடலும்,
நிறம் மாறாத பூக்கள் படத்தில், ஆயிரம்.. மலர்களே.. மலருங்கள்…., “இரு பறவைகள் மலை முழுவதும் அங்கே இங்கே பறந்தன என்ற பாடல்களும்,
கடவுள் அமைத்த மேடை படத்தில், “மயிலே.. மயிலே உன் தோகை எங்கே” பாடலும்,
கரும்புவில் படத்தில், :மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்” பாடலும்,
ப்ரியா படத்தில், “என்உயிர் நீ தானே.. உன் உயிர் நான் தானே” போன்ற பாடல்கள் இன்றளவும் கேட்கும்போது செவிக்கு இன்பத்தை ஏற்படுதுத்துகிறது..
|
Friday, July 3, 2020
En Uyir Neethane Full Video Song | Priya Tamil Movie Songs | Rajinikanth...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment