அறிவியல் மாநாடா ? ஆன்மிக மாநாடா ?
நாளை என்ன நடக்கப்போகிறது
என்பது குறிதுது பேசுவது தான் அறிவியல். 4 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்று
பேசுவது வரலாறு.
அறிவியல் மாநாட்டில் வரலாற்று
தகவல்களையும் ஆன்மிக பெருமைகளையும் பேசி நமது மானத்தை வாங்குவதே இவர்களுக்கு
வேலையாப் போச்சி.
இன்றைய நாகரிக உலகில் அறிவியல் வளர்ச்சியின்
காரணமாக மனிதகுலம் பல்வேறு சதனங்களை உருவாக்கி பயன்படுத்தி வருவதை அனைவரும்
அறிவோம். வானொலி, விமானம், நீராவி இயந்திரம், பேசும் படங்கள் என துவங்கிய அந்த
வளர்ச்சி பயணம், இன்று முப்பரிமாண டிஜிட்டல் அலைக்கற்றைகளை கடந்து முன்னேறி
வருகிறது.
இன்றைக்கு நாம் சாதாரணமாக
பயன்படுத்தும், செல்போன் அதன் மூலம் மிக விரைவாக தொடர்பு கொள்ளும் வாட்ஸ் அப்
உள்ளிட்ட சாதனங்கள் ஒரு காலத்தில் உலகில் உள்ள அனைத்து பகுதி மக்களின் ஒட்டுமொத்த
கற்பனையே என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.
அறிவியல் என்பது ஏதோ வானத்திலிருந்து
வந்த அன்னிய உயிரினங்களுக்கு சொந்தமான ஒரு
தொகுப்பு அல்ல. மனிதர்களின் ஆசைகள், லட்சியங்கள், முயற்சிகள், போராட்டங்களின்
தொகுப்பேயாகும்.
தற்போது, மும்பையில்,
102 வது அறிவியல்
மாநாடு நடைபெற்றுவருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில்
பல ஆய்வாளர்களும் தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்து வருகின்றனர்.
கேப்டன் ஆனந்த் போதாஸ் மற்றும்
அமேயா யாதவ் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்துள்ள ஆய்வு கட்டுரையில்,
விமானம் தயாரிக்கும்
தொழில்நுட்பத்தை இந்தியர்கள் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துவைத்திருந்தனர்.
பரத்வாஜ் முனிவர், ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ள ஸ்லோகத்தில், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு
நாட்டிற்கும், மற்றொரு கண்டத்திற்கும், ஏன் மற்றொரு கோளுக்குமே, விமானங்களை செலுத்த முடியும்
என்று கூறியுள்ளார். இதற்காக 97 புத்தகங்களை உதாரணத்திற்கு காண்பித்துள்ளார்
புஷ்பக விமானம், பறக்கும் கம்பளி, வானத்தில்
தவழும் வாகனங்கள் போன்வைகள் எல்லாம் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் மக்களின்
எண்ணங்களாகவே இருந்துள்ளது.
மேற்கண்ட அறிவியல் மாநாட்டில் இடம்
பெற்றுள்ள ஆய்வு கட்டுறையில், விமான தயாரிப்பு குறித்த 500 வகை கொள்கைகள் குறித்து
சமஸ்கிருத ஸ்லோகங்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால், தற்போதைய விஞ்ஞானிகள் கூட 100 கொள்கைகளைத்தான்
கண்டுபிடித்துள்ளனர். 8 பிரிவுகளின்கீழ் விமான தயாரிப்பை கற்றுத்தரும் நூல்கள் சமஸ்கிருதத்தில்
உள்ளன. தற்போதைய விமானங்களைவிட சக்தியிலும், சொகுசிலும், இந்திய முன்னோர்கள்
கண்டுபிடித்த விமானங்கள் சிறப்பானவையாக இருந்துள்ளன. இவ்வாறு அந்த ஆய்வு கட்டுரை
தெரிவித்துள்ளது மேலும், அறுவை சிகிச்சை மருத்துவம் குறித்தும் பழைய கால
இதிகாசங்களில் உள்ள அம்சங்கள் குறித்தும் ஆய்வுகள் இடம் பெற்றுள்ளன. நடைபெறுவது
அறிவியல் மாநாடா அல்லது ஆன்மிக மாநாடா என்று பார்வையாளர்கள் முனுமுனுக்கும் நிலை
ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment