மலையே இறைவனாக
காட்சிதரும் திருவண்ணாமலை என்று பலர் கூறிவந்தனர். ஆனால் தற்போது, இறைவனே கல்லாக
மாறிவிட்ட இடமாக திருவண்ணாமலை இருப்பதாக சிலர் பேசுவதை கேட்க முடிகிறது. காரணம்
இங்கு நடைபெற்றுள்ள கொடுமை. நல்ல வேளை இந்த உலகில் மனிதனை தவிர வேறு எந்த
ஜீவனுக்கும் சிந்திக்கும் திறன் கிடையாது. ஒரு வேளை அப்படி சிந்திக்கும் திறன்
இருந்தால் நாய் கூட இந்த மனித சமூகத்தை பார்த்து காரிதுப்பும்.
·
கந்துவட்டி கொடுமை
காரணமாக திருவண்ணாமலையில் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை முத்து நகர் பகுதியை சர்ந்தவர் சேகர். தையல் தொழிலாளியான சேகர், அங்கிருந்த சிலரிடம் சுமர் 50 ஆயிரம் பணத்தை கந்து
வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார். வாங்கிய கடனை அடைக்க ரூபாய் 2
லட்சம் வரை திரும்ப செலுத்தியும், மீண்டும் மீண்டும் வட்டியை செலுத்துமாறு கடன் அளித்த கும்பல் மிரட்டியுள்ளது.
இதனால் மனம் உடைந்த சேகர், செவ்வாய் இரவு புதுக்கோட்டையில்
இருந்து தனது மனைவி ஹேமமாலினி மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு
படிக்கும் மகன் பரமேஸ்வரன் ஆகியோருடன் கிளம்பி திருவண்ணாமலைக்கு நள்ளிரவு அதிகாலை
3 மணிக்கு வந்து வேலூர் சாலையில் உள்ள ஒரு
தனியார் ஓட்டல் அறையில் தங்கியுள்ளனர். இன்று காலை 10 மணி வரை அறைக்கதவு திறக்காததால்
சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து ஓட்டல் நிர்வாகம் காவல்துறைக்கு
தகவல் அளித்ததை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சேகர், மற்றும் அவரது மனைவி விஷம் அருந்தி
தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மயக்க நிலையில் இருந்த பரமேஷ் ஆபத்தான
நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
இறப்பதற்கு
முன் சேகர், தான் கடன் வாங்கிய மற்றும் செலுத்திய விவரங்கள் மற்றும் தன்னை மிரட்டிய
கும்பல் குறித்த விவரங்களை செல்போனுடன் எழுதி வைத்த கடிதம் அந்த அறையில் இருந்து
கண்டெடுத்த போலீசார், அதன் விவரங்களை திருச்சி
காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல், திருவண்ணாமலையில் கடன் தொல்லையால், தச்சு தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுச்சேரி, திருநல்லூர், உத்தரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி வேலுசாமி, 40. இவரது மனைவி உத்திரா,
36. வேலுசாமி தனது தொழிலை விரிவுபடுத்த கடந்த சில மாதங்களுக்கு முன், 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு
வந்தனர். ஆனால், வேலுசாமி கடனை திருப்பி தர முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் தனது மனைவி, குழந்தைகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம்
கிராமத்தில் வசிக்கும் தனது மனைவியின் அக்கா சத்யா வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு
சத்யாவிடம் கடனை திருப்பி செலுத்துவதற்காக பணம் கேட்டுள்ளார். சத்யா தன்னிடம் பணம்
இல்லை என கூறியுள்ளார். கடன் தொல்லையால் மனமுடைந்த வேலுசாமி திங்கள் அன்று நல்லவன்பாளையம், வைர நகரில் விஷம்
குடித்து மயங்கி கிடந்தார்.இதையறிந்த வேலுசாமியின் மனைவி உத்திரா மற்றும் சத்யா, ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு வந்து வேலுசாமியை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியில் உயிரிழந்தள்ளார். ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும் குடும்பம்,
குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் கொடுமையை தடுக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்
என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.