ஒழுங்கு
முறை விற்பனை கூட முறைகேடுகளை
சரிசெய்ய வேண்டும்
செப் 14 செவ்வாய்
தேசூரில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம்
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் கம்யூனிஸ்ட் கட்சி கிளையின் முதல் மாநாடு இன்ற நடைபெற்றது. ச.பிரகாஷ் கொடியேற்றினார். ஆ.மணி தலைமை வகித்தார். அஞ்சலை வரவேற்று பேசினார்.
பிரதிநிதிகள் மாநாட்டை இடைக்குழு உறுப்பினர் ஜா.வே.சிவராமன் துவக்கி வைத்து பேசினார். ஆ. மணி கிளையின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு தோழர் விஜயா மாநாட்டை வாழ்த்திப் பேசினார். தீர்மானங்களை வேலு, செல்வி ஆகியோர் முன்வைத்தனர்.
தேசூர் பேரூராட்சி 2 வது வார்டில் குடிநீர் பற்றாக்குறை, மயானத்திற்கு செல்ல பாதை வசதி, பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கேட்டு இயக்கம் நடத்தவேண்டும்,
தேசூர் பகுதியில் வீடற்ற நிலையில் உள்ளோருக்கு அரசு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்..ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலவும் முறைகேடுகளை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சரி செய்ய வேண்டும்..
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
மாநாட்டை நிறைவு செய்து இடைக்குழு உறுப்பினர் ச. தங்கமணி பேசினார்.
தோழர் தேவேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.